உதயகிரி குகைகள்
உதயகிரி குகைகள் பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும். உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி மீ தொலைவில் உள்ளது. குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
Read article